நடிகர் ரஜினிகாந்த் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது , மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீனாகாது என்று கூறினார்.
தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’. ரஜினி பெரிய இடைவெளிக்கு பின் போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசிய போது, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா படம் எனக்கு பிடித்திருந்தது, கஜினி படம் பார்த்த பிறகு இவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை பட்டேன், ஆனால் அதற்கான காலம் அந்நேரத்தில் அமையவில்லை. தற்பொழுது தர்பார் படதின் வாயிலாக அமைந்திருகிறது. இந்த ஆண்டு எனது முக்கியமான பிறந்த நாள் என்றும்,என்னுடைய ரசிகர்கள் என் பிறந்த நாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாட வேண்டாம், அதற்கு பதில் ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்றும்.
இயக்குநர் பாலசந்தர் எனக்கு ரஜினி காந்த் என்ற பெயரை வைத்தார்,அவர் ஒரு சிறந்த நடிகருக்கு தான் இப்பெயரை வைக்க வேண்டுமென அவர் நினைத்தார். அதற்கேற்ப அவருடைய நம்பிக்கையை நான் காப்பாற்றி உள்ளேன். ரஜினியை வைத்து படம் இயக்கினால் நட்டம் ஆகாது என்று என் மேல் நம்பிக்கை வைத்தவர்களின் நம்பிக்கை வீண் போகாது. அது போலவே என் மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் வீண் போகாது.
ஒரு வெற்றியடைய வேண்டுமென்றால் அதற்கான நேரம், காலம், ஏற்ற சூழ்நிலை அந்நேரத்தில் இருக்க வேண்டிய மனிதர்கள் இருந்தால் தான் அவ்வெற்றிக் கிடைக்கும். நிறையபேர் எதிர்மறையாக பேசுவார்கள். ஆனாலும் நாம் அவர்களிடதிலும் அன்புடன் இருப்போம், அன்பு காட்டுவோம் என்றார்.