ஆட்சியரின் வீட்டின் அருகே வாலிபர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பகுதியில் மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே தனது தந்தை, தாயார் ராசாத்தி, மனைவி காயத்ரி மற்றும் குழந்தைகளுடன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை க தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் மாசானத்தின் மீது காவல்துறையினர் அடிக்கடி பொய் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாசானம் தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.