Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் “அண்ணாத்த” ட்ரைலர் வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்.!!

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  இந்த படத்தில்ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.. இந்த படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

 

Categories

Tech |