Categories
அரசியல்

“என் முகம் வேணும், ஆனா எனக்கு டிக்கெட் தர மாட்டாங்களாம்”….!! கோபத்தில் கட்சி தாவிய காங்கிரஸ் பிரபலம்….!!

காங்கிரஸிலிருந்து பிரபலமான பிரியங்கா மவுரியா தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் அரசியல் பிரமுகர்கள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது சர்வசாதாரணமாக அரங்கேறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரபலமடைந்த பிரியங்கா மவுரியா பாஜகவில் இணைந்து காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். உத்திரப் பிரதேசத்தில் உள்ள பல போஸ்டர்களில் “நான் பெண் என்னால் போராட முடியும்..!” என்ற வசனத்துடன் இவரது புகைப்படம் இடம் பெறாத பகுதியே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும் அவ்வாறு காங்கிரஸில் நகமும் சதையுமாய் இருந்து வந்த பிரியங்கா மவுரியா தற்போது திடீரென பாஜகவிற்கு கைதாகியுள்ளார். இவருடைய “நான் ஒரு பெண் என்னால் போராட முடியும்” என்ற வசனம் பட்டி தொட்டி எங்கும் வைரலாக பரவியது.

உத்தரபிரதேசத்தில் இவருடைய இந்த வசனத்தால் இவர் பிரபலம் அடையாத இடமே கிடையாது எங்கு சென்றாலும் இவரைப் பற்றி அனைத்து தரப்பு மக்களும் அறிந்து வைத்திருந்தனர். இவ்வாறு இருக்க திடீரென பிரியங்கா மவுரியா பாஜகவில் இணைந்துள்ளார். இவருடைய நான் ஒரு பெண் என்னால் போராட முடியும் என்ற இந்த வசனம் பிரியங்கா காந்தி வரை எதிரொலிக்க பட்டது. பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி இந்த வசனத்தை உபயோகித்து வந்தார். இவ்வளவு பிரபலமாக இந்த வசனத்தை பேசி காங்கிரஸில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வந்த பிரியங்கா மவுரியா திடீரென பாஜகவில் இணைந்திருப்பது அரசியல் நோக்கர்கள் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுகுறித்து பிரியங்கா மவுரியா கூறுகையில், ‘என்னுடைய முகம், என்னுடைய வசனம், என்னுடைய போஸ்டர்களை மட்டும் காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொண்டது.

ஆனால் தேர்தலில் டிக்கெட் என்று வரும்போது என்னை நிராகரித்து விட்டனர். நான் ஒரு பெண் என்பதாலும் ஒபிசி வகுப்பை சேர்ந்தவள் என்பதாலும் நான் நிராகரிக்கப்பட்டு விட்டேன். ஒருவேளை பிரியங்கா காந்தியின் உதவியாளருக்கு லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இருந்திருந்தால் எனக்கும் டிக்கெட் கிடைத்திருக்கும்.!” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |