தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனகென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மன ஒத்து பிரிவதாக தங்களது முடிவை அறிவித்தனர். அதன்பிறகு சமந்தா பல படங்களில் நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் டிசம்பர் 23 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
தற்போது சமந்தா அளித்துள்ள பேட்டியில், “சமூக வலைதளங்களில் சமீபகாலமாக நான் அதிகமாக இருக்கிறேன் என்பது உண்மைதான். எனக்கு ரசிகர்களோடு பேசுவது, அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற மாதிரியான படங்களில் நடிப்பது பிடிக்கும். என் சம்பந்தப்பட்ட படங்கள் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதும் பிடிக்கும். அந்த உணர்வே தனி, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதனைத் தொடர்ந்து சிலர் என்னை கேலி செய்து, கொடூரமாக அவதூறு பேசுகிறார்கள். அப்படிப்பட்டவர்களால் நான் ஏன் எத்தனை இரவுகள் தூக்கம் இல்லாமல் கழித்தேன். நான் தவறு செய்யாத வரை எனக்கு எந்த வேதனையும் இல்லை. என்னை நேசிக்கும் ரசிகர்களுக்காக திரைப்படங்கள் மூலம் சந்தோஷப்படுத்த அயராமல் உழைப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.