பெங்களூரில் ஸ்மோடோவில் உணவு ஆர்டர் செய்த பெண்ணை டெலிவரி பாய் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் ஹிட்டேஷா சந்திரனே. இவர் அழகுக் கலை நிபுணராக வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று இவர் ஸ்மோடோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்த உணவை தாமதமாக டெலிவரி செய்ததால் அந்தப் பெண் உணவை திருப்பி எடுத்துக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் டெலிவரி செய்த நபருக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் தீவிரம் அடைந்ததால் அந்த பெண், டெலிவரி செய்ய வந்த நபரை செருப்பால் தாக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர் தற்காப்புக்காக அந்த பெண்ணை தடுக்க முயன்றுள்ளார்.
இச்சம்பவத்தின் போது அந்த பெண் அருகில் இருந்த கதவில் மோதியதால் அவருக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் டெலிவரி பாய் தனது மூக்கை உடைத்து விட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்து அதை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்துவதாகவும், இதன்பின் இந்தமாதிரி பிரச்சன்னைகள் ஏற்படாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க போவதாக ஸ்மோடோ நிர்வாகம் கூறியுள்ளது.
https://twitter.com/i/status/1369486163140956160