Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என் வயல் வழியாக போகக்கூடாது…. அறுவடை இயந்திரத்தால் பிரச்சனை…. விவசாயிக்கு அரிவாள் வெட்டு….!!

அறுவடை இயந்திரம் கொண்டு வருவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பழைய பேட்டையில் சிவசுப்பு என்பவர் வாழ்ந்து வருகிறார் . இவரது சொந்த வயல் கொம்பந்தபந்தனூரில் உள்ளது. அதில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்திவருகிறார். அதேபோன்று முத்துக்குமார் என்பவருடைய வயல் சிவ சுப்புவின் வயலுக்கு அருகே உள்ளது . இதனிடையே இது நெல் சாகுபடி காலம் என்பதால் சிவசுப்பு தனது வயலில் நெல் பயிரிட்டு அறுவடை செய்ய எந்திரம் கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் முத்துக்குமார் அவரது வயல் வழியாக அறுவடை இயந்திரம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் சிவ சுப்புவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார் . இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் முத்துக்குமாரை கைது செய்தார்கள். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |