Categories
தேசிய செய்திகள்

என் வாயை மூடமுடியாது…. மோடிக்கு சவால் விட்ட பிரபல தமிழ் நடிகர்…..!!!!

நடிகர் சித்தார்த், சினிமா தாண்டி சமூக பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தொடர்ச்சியாக சமூகவெளியில் முன் வைத்து வருபவர். சமீபத்தில், ’உ.பி மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்’ என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் ’பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ட்விட்டரில் விளாசினார் சித்தார்த். அவரது இந்த கருத்துக்கு பாஜக தொண்டர்கள் பலரும் ட்விட்டரில் எதிர்வினையாற்றினர்.

இதனால், கோபமுற்ற பாஜகவினர் சித்தார்த்தின் போன் நம்பரை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டதாக தெரிகிறது. இதனை, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சித்தார்த், “என்னுடைய போன் நம்பரை பஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன.

அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார். மேலும், மோடி, அமித்ஷாவை டேக் செய்து, “நான் வாயை மூடிக்கொள்ள மாட்டேன். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்” என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள். இதனால் #IStandWithSiddharth என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

Categories

Tech |