“என் வாழ்க்கையில் ஒரு தூணாக இருந்தவள் நீ” என்று மறைந்த தன்னுடைய தோழி பவானியை நினைத்து யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
யாஷிகா ஆனந்த் தனது தோழியான பவானி உட்பட பலருடன் காரில் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி பவானி பலியாகியுள்ளார். மேலும் யாஷிகா ஆனந்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த யாஷிகா மெல்ல மெல்ல குணமடைந்துள்ளார்.
இந்நிலையில் பவானியின் பிறந்த நாளன்று நீ இல்லை என்று மன வேதனைப்பட்ட யாஷிகா தன் தோழியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதாவது “என் வாழ்க்கையில் ஒரு துணாய் இருந்த நீ உனது பிறந்தநாளன்று இல்லை” என்பதை என்னால் ஏற்க முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் உன்னுடைய அழகான சிரிப்பை நான் இழந்து விட்டேனே என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.