15வது ஐபிஎல் சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகின்ற இளம் வீரர் கார்த்திக் தியாகி, தனது வாழ்க்கையை மாற்றியது சுரேஷ் ரெய்னா தான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், நான் முதலில் 14 வயதுக்குட்பட்ட அணிக்காகவும், அதன் பிறகு 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காகவும் விளையாடத் தொடங்கினேன். ஒருமுறை 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்தேன்.
அப்போது எனது பயிற்சியின்போது பந்துவீச்சை கவனித்த ரெய்னா என்னுடைய பந்துவீச்சு மிகவும் பிடித்ததாக கூறினார். எதிர்காலத்தில் எனக்கு வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதாக அவர் என்னிடம் கூறினார். அவர் என்னுடைய வாழ்க்கையில் ஒரு கடவுளாக வந்தார். அவரின் தலைமையின் கீழ் நான் ரஞ்சி டிராஃபி தேர்ந்தெடுக்கப்பட்ட போது மக்கள் என்னை அடையாளம் காணத் தொடங்கினார்கள். அது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளார்.