Categories
சினிமா தமிழ் சினிமா

என் வாழ்க்கை இப்படித்தான்…. மீனா போட்ட உருக்கமான பதிவு…. ஆறுதல் சொல்லும் திரபிரபலங்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார்.

ஆனால் காலதாமதம் காரணமாக நுரையீரல் கடக்காமல் போனதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டுவர தொடங்கி இருக்கிறார். இதற்கிடையில் அவர் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தனது இளம் வயது புகைப்படங்களை பதிவிட்டு அதனுடன், ‘வாழ்க்கை ரோலர் கோஸ்டர் போன்றது. அதை வாழுங்கள். இந்த நேரம் மட்டுமே நம்மிடம் இருக்கிறது’, என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மீனாவின் இந்த உருக்கமான பதிவை கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். திரை பிரபலங்களும் நம்பிக்கையான வார்த்தைகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Categories

Tech |