Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் வாழ்வில் வந்த வானவில் நீயடி’… மனைவிக்கு கவிதை எழுதி பிறந்தநாள் வாழ்த்து கூறிய சாண்டி மாஸ்டர்..‌.!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் தனது மனைவிக்கு கவிதை எழுதி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சாண்டி மாஸ்டர் . இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார் . இதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’, கவினின் ‘அஸ்கு மாரோ’ ஆல்பம் பாடல்களுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். தற்போது இவர் ‘3:33’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் .

இந்நிலையில் சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மனைவியின் பிறந்தநாளுக்காக கவிதை எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘எனக்காகவே வாழும் ஒரு உயிர். என்னோட வெற்றிக்காகவே உழைக்கும் ஒரு உயிர். உன்னாலே நான். உனக்காகவே நான். அன்பு அறியாத என் வாழ்வில் வந்த வானவில் நீயடி’ என பதிவிட்டுள்ளார். மேலும் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியின் வயிற்றில் முத்தமிடுவது போன்ற ஒரு அழகிய புகைப்படத்தையும் சாண்டி மாஸ்டர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |