தன்னுடைய திறமையும், கடின உழைப்பை மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்ததாக ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ரியா சென்னையில் உள்ள அரக்கோணத்தில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர். திறமையும், கடின உழைப்பால் மட்டுமே சினிமாவுக்கு வந்ததாகவும், இன்றளவும் “casting couch” சந்தித்ததில்லை என்றும் கூறியுள்ளார். நடிப்பை போல் இவர் பாடகியாகவும் திரையுலகில் நடித்து வருகிறார். அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய “ஓ சொல்றியா மாமா” பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி உள்ளது. பிஸியான நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா சில வருடங்களுக்கு முன்பு Mee Too விவகாரம் குறித்து வெளிப்படையாக சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது: “mee too இயக்கம் ஹாலிவுட்டிலிருந்து தான் தொடங்கியது. புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஹார்வே வெயிஸ்டன் மீது பல நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் அடுக்கடுக்கான பாலியல் புகார்களை முன்வைத்தனர். இப்போ உலகம் வேறமாறி மாறி இருக்கு “பெண்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க உலகம்” தயாராகிவிட்டது. ஏய் சும்மா இருடி அப்படின்னு இப்ப யாரும் சொல்ல முடியாது. தப்பு எப்போ செஞ்சாலும் தப்பு தான். mee too இயக்கம் போன்றவை மூலம் இளம் தலைமுறையினர் எப்படி பெண்களை மதிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்வார்கள்.
மேலும் நான் என்னை மிகவும் மதிக்கிறேன், என்னுடைய தரம் எனக்கு தெரியும். அதே போல் நான் வேலைக்காக ஒரு போதும் படுக்கையை பகிர மாட்டேன் என ஒரு பெண் துணிந்து சொன்னால் casting couch என்பது இல்லாமலே போய்விடும் எனவும், நான் என்னுடைய திறமையும் கடின உழைப்பை மட்டுமே நம்பி வந்தேன். இதுவரை பல படங்கள் பண்ணி இருக்கேன் ஆனா இன்றளவும் mee too காட்சியை நான் சந்தித்ததில்லை” என மனம் திறந்து பேசியுள்ளார்.