மாநகரம் திரைப்படத்தில் அறிமுகமாகி பின் கைதி படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் இடம் பிடித்துவிட்டார். கைதி படத்தின் வெற்றியை அடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைபடத்தின் வெற்றியை அடுத்து கமலின் 232-வது படமான “விக்ரம்” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கிறார்.
இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
வரும் 15-ம் தேதியன்று இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் ஆகிய இரண்டும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜை கமல்ஹாசன் பாராட்டி இருப்பதாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக லோகேஷ்கனகராஜ் பதிவிட்டிருப்பதாவது “36 வருட தவம். எனக்குள் உள்ள இயக்குனரை என் உலக நாயகன் கமல்ஹாசன் பாராட்ட” என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.