மாதம்தோறும் 50 லட்சம் என்-95 முகக்கவசங்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்க உதவும் முகக்கவசங்கள் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு அண்மையில் தளர்த்தி இருந்தது. இந்நிலையில் மாதந்தோறும் 50 லட்சம் என்- 95 முகக்கவசங்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று அகில இந்திய முகக்கவசம் தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அந்த சங்கத்தின் துணைத்தலைவர் ஹன்சுமாலி ஜெயின் இணையவழி மூலம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். என்- 95 முகக்கவசங்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்க வேண்டும். இந்தியாவில் மாதம்தோறும் இருபது கோடி என்-95 முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் வெறும் 50 லட்சம் மட்டும் மாதம்தோறும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.