மதுரையில் 5 வாலிபர்களை காவல்துறையினர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த நவீன யுகத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஆங்காங்கே சில நபர்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான செயல்களை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கொலை, வழிப்பறி உட்பட பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்த 5 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் ஆனந்த் உத்தரவிட்டார். அவரின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் அந்த 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.