மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் திலகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணல் கடத்தியதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டதால் வாத்தலை, மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இவரின் மீது மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இதனால் திலகனை குண்டர் சட்டத்தின் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்தப் பரிந்துரையின் படி திலகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து சிறையில் இருக்கும் திலகனிடம் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படத்திற்கான உத்தரவு படிவத்தின் நகலை மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் அவரிடம் ஒப்படைத்துள்ளார்.