Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…… போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு சென்ற வாலிபர்….. போலீசார் அதிரடி….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள பள்ளியாடி பகுதியில் ஞானமுத்து என்பவர் வாசித்து வருகிறார். இவருடைய மகன் ராஜேஷ் சர்மா(27). இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணி மகன் ஜான்ரோஸ். அதே பகுதி சேர்ந்த நேசமணி மகன் மனோகரன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் ராஜேஷ் சர்மா மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ஜாண்ரோஸ் தனது பெயரை நேசமணி மகன் மனோகரன் என மாற்றி ஆள் மாற்றம் செய்து போலி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக கூறியிருந்தார்.

இதனையடுத்து இந்த புகாரின் மீது விசாரணை நடத்த சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத், மார்த்தாண்டம் போலீசாருக்கு உத்திரவிட்டார். அதன்படி மார்த்தாண்டம் போலீசார் ஜானண்ரோஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மனோகரன் இறப்பதற்கு முன்பே ஜான் ரோஸ் மனோகரன் பேரில் பாஸ்போர்ட் எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 2016 ஆம் ஆண்டுக்கு முன்பே வெளிநாட்டுக்கு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |