Categories
தேசிய செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்குறாங்க… தீப்பந்தம் ஏந்தி ஓடிய கிராம மக்கள்…வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…!!

மத்திய பிரதேசத்தில் உள்ள கிராம மக்கள் கொரோனாவை விரட்டுவதற்காக வித்தியாசமான முறையில் செயல்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றில் 2ஆம் அலை நாடு முழுவதும் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள பல விழிப்புணர்வு செயல்களை செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா கிராம மக்கள் கொரோனாவை விரட்டுவதற்கு நூதன முறை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து கணேசபுரா கிராம மக்கள் கொரோனாவை விரட்டுவதற்காக இரவு நேரத்தில் தீப்பந்தம் ஏந்தியவாறு கிராமத்தை சுற்றி ஓடியுள்ளனர். அப்போது ஓடு கொரோனா ஓடு என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து தீப்பந்தங்களை ஏந்தி ஓடிய நபர்கள் அதனை ஊருக்கு வெளியே வீசியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Categories

Tech |