வீட்டில் கழிவறை சுவரில் துளையிட்டு தங்க நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பட்டூரில் பச்சமுத்து(49) என்பவருக்கு சொந்தமான வீடு இருக்கிறது. இவர் சிங்கப்பூரில் கம்பெனி நடத்தி அங்கேயே வசித்து வந்துள்ளார். இதனால் சொந்த ஊரில் இருக்கும் வீட்டில் அனைத்து இடங்களிலும் கண்காணித்து கேமராவை பொருத்தி, அங்கு நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்து வந்துள்ளார். நேற்று கண்காணிப்பு கேமரா இயங்காததால் சந்தேகமடைந்த பச்சமுத்து தனது நண்பரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
இதனால் பச்சமுத்துவின் நண்பர் அங்கு சென்று பார்த்தபோது வீட்டின் கழிவறை சுவரில் துளையிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பார்வையிட்டனர். இதனை அடுத்து பச்ச முத்து அளித்த தகவலின் படி கழிவறை சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 1 1/2 பவுன் தங்க நகை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.