சட்ட விரோதமாக சாரயம் காய்ச்சிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் அமைந்திருக்கும் அரண்மனை புதூர் கிராமத்தின் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக சாரயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் குபேந்திரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.