Categories
தேசிய செய்திகள்

“எப்படிலாம் திருடுறாங்க” ஏடிஎம் மெஷினை தூக்கிச் சென்ற மர்ம கும்பல்….. ரூ. 12.10 லட்சம் அபேஸ்….. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

ஏடிஎம் மெஷின் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோபூரில் உள்ள சர்ச்சான்ப் கிராமத்தில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஒரு ஏடிஎம் மெஷின் இருந்தது. இந்த ஏடிஎம் மெஷின் இருந்த அறையை மர்ம நபர்கள் உடைத்து அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை தூக்கி சென்றுள்ளனர். இந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 12.10 லட்சம் இருந்துள்ளது.

இது தொடர்பாக வங்கி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏடிஎம் மிஷினோடு 12.10 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |