Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்படில்லாம் பேசுனாரு..? இப்படி அடிபணிந்து விட்டீர்களே….! அழிவை நோக்கி அதிமுக ..!!

தமிழக முதல்வரையும், பாமக அன்புமணி ராமதாசையும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடுமையாக விமர்சித்தார்.

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதே எடப்பாடி பழனிச்சாமியை புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு காசுகளை வாங்கிக்கொடுக்கும் கமிஷன் ஏஜென்ட் என்றெல்லாம் விமர்சனம் செய்திருக்கிறார். அப்படி பட்டவர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, அரசியலுக்காக இன்றைக்கு எங்கள் சமூகத்தை புறம் தள்ளி இருக்கக்கூடிய நிலையில், எங்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகின்ற ஒரு நிலையில், தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட முக்குலத்தோர் புலி படை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எங்களை நாங்கள் விடுவித்துக் கொள்கிறோம்.

வரக்கூடிய தேர்தலிலே எங்கள் சமூகங்கள் தீர்மானிக்கக்கூடிய 84தொகுதிகளில் எங்களை புறக்கணித்து  தமிழகத்தில் எவர் ஒருவராலும் அரசியலே செய்ய இயலாது என்கின்ற நிலையை நாங்கள் இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டும். அந்த நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.  இந்த அரசுக்கு மீண்டும் ஒருமுறை நான் கோரிக்கை வைக்கின்றேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்கின்ற மாபெரும் இயக்கம் அனைத்து சமுதாய மக்களையும் அன்பாக பண்பாக, பண்பாக, ஒரு தாய் மக்களாக பாவித்த ஒரு இயக்கம். அந்த இயக்கத்தை இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்…. வன்னியர் சமூகத்திற்கும், அவர் சார்ந்த கொங்கு கவுண்டர் சமுதாயத்திற்குமான ஒரு அமைப்பாக மாற்றி கட்டமைத்து இருக்கிறார்.

இது வளர்ச்சிக்கான பாதை அல்ல, அழிவை நோக்கிய பாதை. ஆகவே மறுக்கப்படுகின்ற எங்களது இடஒதுக்கீடு களை பெறுகின்றவரை… எங்களுடைய போராட்டத்தை எங்களுடைய சமுதாயம் நடத்தும். அடிக்கடி சொல்லுகின்றார்கள்…. ஒன்றரை கோடி தொண்டர்கள், ஒன்றரை கோடி தொண்டர்கள் என்று….

கணக்கெடுத்துப் பாருங்கள்…. அந்த ஒன்றரை கோடி தொண்டர்களின் 75 லட்சம் தொண்டர்கள் நான் சார்ந்த என் முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. இவர்கள் இல்லாமல் நீங்கள் இந்த அரசை தீர்மானிக்க முடியாது என்பதை இந்த நேரத்திலே நான் திட்டவட்டமாக தெரிவித்து கொள்கின்றேன்.

Categories

Tech |