Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எப்படி ஆடனும்….. “ராகுலுக்கு கிங் கோலி அட்வைஸ்”….. இன்று கலக்குவாரா…. பார்ப்போம்.!

அடிலெய்டில் போது கே.எல் ராகுலுக்கு விராட் கோலி சில அறிவுரைகளை வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது..

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில இருக்கிறது. இருப்பினும் இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் ஃபார்மில் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் மூன்று போட்டியிலும் மொத்தமாக 22 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் தனது ஃபார்மைக் காட்டினார், ஆனால் அன்றிலிருந்து, இந்தியாவுக்கு மிகவும் தேவையான தொடக்கத்தை கொடுக்க உதவத் தவறிவிட்டார்.

துவக்க வீரர் இப்படி சொதப்பி வருவதால் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் ரிஷாப் பண்ட் மூன்று போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். எனவே ராகுலுக்கு பதில் அவரை சேர்க்க வேண்டும் என ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று வங்கதேச அணியை இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவருமே நேற்று தீவிர பயிற்சி செய்தனர்..

இந்த விமர்சனத்திற்க்கு மத்தியில், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, நேற்று அடிலெய்டில் பயிற்சியின் போது கேஎல் ராகுலுடன் சிறிது நேரம் செலவழித்து அவருக்கு வழிகாட்டுவதைக் காண முடிந்தது. இருவரும் நெட்ஸில் நிறைய நேரம் செலவிட்டனர், மேலும் நடுவில் நீண்ட நேரம் பேசுவதையும் காண முடிந்தது. பின்னர் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் மனநல பயிற்சியாளர் பாடி அப்டன் ஆகியோர் கே.எல் ராகுலுடன் பேசுவதைக் காண முடிந்தது. 33 வயதான கே.எல் ராகுலுக்கு அவரது பேட்டிங் நிலைப்பாடு மற்றும் புட் வொர்க் பற்றி சில அறிவுரைகளை வழங்கினார். விராட் கோலி ராகுலுக்கு அறிவுரை கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே இன்றைய போட்டியில் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

https://twitter.com/Akky__bishnoi71/status/1587399871157350400

 

Categories

Tech |