தூத்துக்குடி மாவட்டத்தில் முடிதிருத்தும் நிலையம் நடத்திவருபவரிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாடினார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடையே காலை 11 மணி அளவில் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் இன்று நடைபெற்ற ‘மன் கி பாத் ‘நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் தூத்துக்குடியில் வசித்து வரும் முடி திருத்தும் தொழிலாளி பொன் மாரியப்பன் என்பவரைப் பற்றி பேசினார்.
தூத்துக்குடியில் பொன் மாரியப்பன் என்பவர் முடித்திருத்தும் நிலையம் நடத்தி வருகிறார். அவருக்கு புத்தகத்தில் மேல் இருந்த பிரியத்தின் காரணமாக அவரது கடையில் நூலகம் அமைத்துள்ளார். அதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொன் மாரியப்பனிடம் பேசிய போது ‘வணக்கம் நல்லா இருக்கீங்களா ‘ என்று தமிழில் பேசி வியக்க வைத்தார். அதேபோல் ‘எப்படி இந்த யோசனை தோன்றியது?’ , ‘என்ன புத்தகம் பிடிக்கும்?’ என்று பொன் மாரியப்பனிடம் பேசினார்.