நடைபெறும் மாநாட்டிற்கு பிரதமர் சென்றுள்ளார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள சமர்கண்ட நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைதி மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று பிரதமர் மோடி தனி விமானத்தின் மூலம் உஸ்பெஸ்கிஸ்தான் சென்றடைந்தார். இந்நிலைகள் மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பானது உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கை தொடங்கிய பிறகு முதல்முறையாக நேருக்கு நேரான சந்திப்பாகும். இதனால் இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையே ஆன பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள், ஆசிய பசிபிக் பிராந்திய நிலவரம், ஐ.நா சபை மற்றும் ஜி 20 நாடுகள் அமைப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.