பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமை விராட் கோலி நேரில் சந்தித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது..
20 ஓவராக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 6 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. இதில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.. விராட் கோலி உட்பட அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் இருக்கும் பாகிஸ்தான் அணியுடன் நாளை மறுநாள், அதாவது 28ஆம் தேதி துபாயில் லீக் சுற்றில் மோத இருக்கிறது..
ஆசிய தொடரிலேயே இந்த போட்டிதான் மிக முக்கியமான போட்டி.. இந்த போட்டியை எதிர்பார்த்து தான் உலக ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.. கடந்த 2021 ஆம் ஆண்டு இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் உலக கோப்பை வரலாற்றில் முதன் முறையாக வென்று சாதனையை நிகழ்த்திக் காட்டியது. இந்த நிலையில் இந்த ஆசிய தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை பழிதீர்க்குமா? என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமை விராட் கோலி நேரில் சந்தித்து கைகொடுத்து தோளில் தட்டி சிறிது நேரம் பேசி இருக்கிறார்..
மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் சஹால் உள்ளிட்ட இந்திய வீரர்கள் முகமது நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோரை சந்திக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.. இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது..
என்னதான் பரம எதிரிகளாக இந்தியா – பாகிஸ்தான் கருதப்பட்டு வந்தாலும் அது போட்டியில் மட்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் அல்ல என்பதற்கு முக்கியமாக இந்த சந்திப்பு இருக்கிறது. முன்னதாக கடந்த 2021 உலகக் கோப்பை முடிந்த பின் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் கூட விராட் கோலி முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாமை சந்தித்து புன்னகையுடன் சந்தித்து பேசியது நினைவு கூறத்தக்கது.
Hello DUBAI 🇦🇪
Hugs, smiles and warm-ups as we begin prep for #AsiaCup2022 #AsiaCup | #TeamIndia 🇮🇳 pic.twitter.com/bVo2TWa1sz
— BCCI (@BCCI) August 24, 2022