எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகிவிட்டது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் எப்படி இருந்தது தற்போது 18 மாதங்களில் எப்படி இருக்கிறது என்பதை பாருங்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தான்.
ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டம் போராட்டம் தான் நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது.மேலும், தமிழகத்தில் இளம்பெண்கள், மாணவர்கள் மற்றும் காவல் துறையினருக்கு கூட பாதுகாப்ப்பு இல்லாத சூழல் திமுக ஆட்சியில் நிலவி வருகிறது என்று குற்றம்சாட்டினார்.