நடிகர் சிம்பு அவரது பிறந்தநாளன்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
1984-இல் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘உறவு காத்த கிளி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. பிறகு குழந்தை நட்சத்திரத்திரமாக கலக்கி வந்த இவர் காதல் அழிவதில்லை, தம், அலை, கோவில் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவர் பல துறைகளில் கைதேர்ந்தவர். நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல துறைகளில் தன் திறமைகளை வெளிக் காட்டியவர். இந்நிலையில் சிம்புவின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. அவர் தனது நடிப்பில் கவனம் செலுத்த தவறியதால் அவரது உடல் எடை அதிகரித்து 2019-இல் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் 105 கிலோ எடையுடன் கதாநாயனாக திரையில் தோன்றினார்.
இதனால் அவர் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். இதன் காரணமாக சிம்பு தீவிரமாக உடற்பயிற்சி செய்து கடந்த ஆண்டு வெளியான ஈஸ்வரன் படத்தில் உடல் எடையை குறித்து தனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தார். தற்போது அவருடைய பிறந்தநாள் அன்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் தான் எவ்வாறு உடற்பயிற்சி செய்தேன். 105 கிலோவிலிருந்து 70 கிலோ வரை எப்படி எடையை குறைத்தேன் என்ற ரகசியத்தை அந்த வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.