பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் இருந்து நைசாக 1 1/2 லட்சம் ரூபாயை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் வடக்குத்தெருவில் பொன்னுச்சாமி (67) என்பவர் வசித்து வருகிறார். இவர் பரமக்குடியில் உள்ள தன் சொந்த வீட்டை விற்று 3 லட்சம் ரூபாய் பணத்துடன் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பேருந்தில் சென்றார். அப்போது சத்திரக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து ஏறிய மர்மநபர் ஒருவர் பொன்னுச்சாமியின் அருகே அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த நபர் ராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகே இறங்கியுள்ளார். அப்போது பொன்னுசாமி தான் வைத்திருந்த பணப்பையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டும் காணமல் போயிருந்ததுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னுச்சாமி உடனடியாக இது குறித்து ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.