டெல்லியில் தனது காதலனை வெட்டி சூட்கேஸில் வைத்துச்சென்ற காதலியை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், பிரீத்தி சர்மா எனும் பெண் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஃபெரோஸ் என்பவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், ஃபெரோஸ் இவரைத்திருமணம் செய்ய மறுத்ததால் அவரை வெட்டி, உடலை சூட்கேஸில் வைத்துச்சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.
காதலனின் உடலை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து உடலை அப்புறப்படுத்த எடுத்துச்செல்லும் போது எதேச்சையாக காவல்துறையினர் சோதனை செய்கையில் பிரீத்தி சர்மா சிக்கியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை பாஜக ஆதரவாளர்கள் ’லவ் ஜிஹாத்’ எனக்கூறி ஓர் இந்துப்பெண்ணை இஸ்லாமிய இளைஞர் ஏமாற்றி விட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.