Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எப்படி ஏற்பட்டது….? எரிந்து நாசமான தனியார் பேருந்து…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஒரகடத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை ஏற்றி செல்லும் தனியார் பேருந்து காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென அந்த பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர்.

ஆனால் இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |