நடிகை கனிஷ்கா சோனி விவேக் ஹீரோவாக நடித்த பத்தாயிரம் கோடி என்ற தமிழ் படத்தில் நடித்தவர். இதனை அடுத்து தெலுங்கு, இந்தியில் மட்டுமல்லாமல் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டவர் . எனக்கு எந்த ஆணும் தேவையில்லை. சிவனும் சக்தியும் என்னுள்ளே இருக்கிறார்கள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையவாசிகள் அவரை சராமாரியாக விமர்சித்து இருந்தனர்.
இவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வலம் வந்தது. இந்நிலையில் தற்போது நியூ யார்க்கில் இருவர் அவர், “நான் சுய திருமணம் செய்து கொண்டதை போல சுயமாக கர்ப்பம் ஆக முடியாது. அது அமெரிக்காவின் ருசியான பிஸ்ஸா, பர்கர் தான் கொஞ்சம் எடையை அதிகரிக்க வைத்துள்ளது. ஆனால் நான் இதை விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.