கரூர் பேருந்து நிலையத்தில் உச்சக்கட்ட போதையில் கணவன், மனைவி இருவரும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றாக குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் எழ முடியாமல் படுத்திருந்த பெண்ணை கணவர் எழுப்புவதற்காக அடித்து உதைத்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் வந்து பெண்ணை அழைத்து சென்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மது எப்படி கிடைத்தது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.