லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளிடையே கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, ரோலேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவின் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்த சூர்யா டுவிட்டர் பதிவானது தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் கனவு நனவானது. இதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி லோகேஷ் கனகராஜ். ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் அன்பை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.