கல்லூரியில் வைத்து கருத்தரங்கம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் அமைந்துள்ள உமையாள் அரங்கில் வைத்து உள்துறை மதிப்பீட்டு குழுவின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி, குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜெயசாலா, அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மாணிக்கவாசகம், பேராசிரியர் ராஜன்கணபதி, பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மாணிக்கவாசகம் கல்லூரிகளில் தேசிய தர மதிப்பீட்டு விண்ணப்பிப்பது எப்படி? அதற்கு தயாராகும் முறைகள் குறித்தும் பேராசிரியர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.