Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்படி தவறாக பேசலாம்?…. போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரம் சிவனடியார்கள்…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!!!

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் சிவனடியார்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சிவதாமோதரன் சுவாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் உள்ள தில்லை காளி அம்மன் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாக பேசிய விஜய் என்பவரை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் நடராஜ சுவாமிகள், வாதவூரடி சுவாமிகள், திவாகர் சுவாமிகள், விஷ்வ இந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் தமிழர் கட்சி ரவிக்குமார், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் மாமல்லன் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் பாடி சிவதாண்டவம் ஆடினர். இதனையடுத்து  சிதம்பரத்திற்கு  அதிக அளவில் சிவனடியார்கள் வருவதால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Categories

Tech |