தீ விபத்து ஏற்பட்டதால் பள்ளியில் இருந்த புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தும் எரிந்து நாசமானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணல்மேல் குடி அய்யனார் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இருக்கும் ஒரு அறையில் புத்தகம் மற்றும் பள்ளி சீருடைகள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று திடீரென அந்த அறையில் இருந்து புகை வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அறையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தும் எரிந்து நாசமானது. பள்ளி விடுமுறை தினத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.