சரக்கு வாகனத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் இருந்து டான்போஸ்கோ செல்லும் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த போது மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சரக்கு ஆட்டோவில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் வாகனத்தின் உரிமையாளர் யார்? எப்படி தீ விபத்து ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.