Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுன்னு தெரியல…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. அழிந்துவரும் கடல் வாழ் உயிரினம்..

திருநெல்வேலியில் கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நவீன யுகத்தில் சில வனம் சார்ந்த மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் இனம் மெல்ல மெல்ல அழியத் தொடங்குகிறது. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் பல முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு வருகின்றது. இருப்பினும் ஒரு சில இடங்களில் சில உயிரினங்கள் அழிந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் உவரியில் சுவாமி தீர்த்தவாரி மண்டபம் அமைந்துள்ளது.

அப்பகுதியிலிருக்கும் கடலோரத்தில் கடல்வாழ் உயிரியான கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உவரி காவல் நிலையத்தில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த கடல் ஆமையை பார்வையிட்டனர். பின்னர் ஆமையை கைப்பற்றி நெல்லை மாவட்ட வனத்துறையினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தார்கள்.

Categories

Tech |