Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எப்படி பணி நீக்கம் செய்யலாம்?…. போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள்…. மதுரையில் பரபரப்பு….!!!!

காமராஜர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் பணி  நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது.

மதுரை மாவட்டத்தில் காமராஜர் பல்கலைக்கழகம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி  நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையிடம்  பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என கூறி மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |