தீ பற்றிய விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு வந்த ராமகிருஷ்ணன் உடலில் ஒட்டி இருந்த பெயிண்டை அகற்றுவதற்காக தின்னர் தடவிவிட்டு கியாஸ் அடுப்பை சமைப்பதற்காக பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென ராமகிருஷ்ணனின் மீது தீ பற்றியுள்ளது.
இதில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து ராமகிருஷ்ணனின் உறவினர் சரவணகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.