Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எப்படி பழுக்க வைக்கிறாங்க….? 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் சசிதீபா தலைமையில் அதிகாரிகள் நேற்று நெல்லை சந்திப்பு கண்ணம்மன் கோவில் தெருவில் இருக்கும் மாம்பழம் மொத்த குடோன்கள், சில்லறை விற்பனை கடைகளில் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு கடையில் ஸ்பிரேயர் மூலம் எத்திலின் என்ற ரசாயனம் தெளித்து மாங்காய்களை பழுக்க வைத்தது தெரியவந்துள்ளது.

இதனால் அங்கிருந்த 500 கிலோ மாம்பழங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு மாம்பழங்களை குப்பை வண்டிகளில் ஏற்றி பினாயில் தெளித்து குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைத்து அழித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |