தேமுதிகவினருக்கு பக்குவம் இல்லை என்று முதல்வர் கூறியதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த, இந்த கூட்டணி சுமுகமாக செல்லவேண்டும் என்று தான் கடைசி வரைக்கும் மிக மிக பொறுமையாக, மிக மிக பக்குவமாக, மிகமிக விட்டுக்கொடுத்து அந்த அளவு நாங்கள் பக்குவமா தான் இந்த கூட்டணியை டில் பண்ணுனோம், இதுதான் உண்மை. நான் கூட பல முறை சொன்னேன் 234 தொகுதிக்கு பொறுப்பாளர் போட்டு தயாராக இருக்கின்றோம். அறிவிப்பது ஒரு நிமிட வேலை. அது பெரிய விஷயம் அல்ல. இந்த கூட்டணி சக்ஸஸ் ஆக வேண்டும்.
இந்த கூட்டணி மூலம் நிற்கும் அத்தனை வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும், இந்த ஆட்சி தொடரனும் என்று நாங்கள் உறுதியாக இருந்ததனால், மிக மிக பக்குவமாகத்தான் நாங்கள் கையாண்டோம். ஆனால் நாங்கள் சொன்ன எதுவுமே அவர்கள் கருத்தில் கொள்ளவே இல்லை. கடைசி வரைக்கும் அதே மாதிரி இருந்ததால் ,கனத்த இதயத்துடன் அந்த கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இதுதான் அங்கே நடந்தது. இதை அண்ணன் எடப்பாடி அவர்கள் பக்குவம் இல்லை என்று சொல்கிறார்.
அவர் எப்படி முதலமைச்சராக போய் பதவி வாங்கினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த அளவு பக்குவம் எங்களுக்கு யாருக்கும் தெரியாது. நாங்கள் உண்மையாக இருந்தோம். நேர்மையாக இருந்தோம். வெளிப்படையாக இருந்தோம். உரிமையுடன் அவர்களிடத்தில் கேட்டோம். உரிமையுடன் பேசினோம் .எதற்குமே செவிசாய்க்காத போது ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்கள் கருத்தை ஏற்று இந்த கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேறினோம் .இதுதான் நடந்த ஒரு விஷயம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.