இந்திய மருத்துவ கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் வைத்து இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின்போது பெண் ஒருவர் இறந்துவிட்டார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அர்ச்சனா மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மருத்துவர் அர்ச்சனா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் நோயாளிகள் இழப்புக்கு மருத்துவர்கள் காரணம் எனக்கூறி வழக்கு பதிவு செய்ததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர் டாக்டர் நாகராஜன், தியாகராஜன், முத்தையா செல்வகுமார், பொருளாளர் ராஜசேகர், செயற்குழு உறுப்பினர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது