மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த திருநங்கைகளுக்கு 2022- ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் விருது மற்றும் 1 லடசம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி பெறாமல் தனது வாழ்க்கை கட்டமைப்பு கொண்ட திருநங்கைகளாக இருந்தும் திருநங்கைகள் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்திருக்க வேண்டும்.
மேலும் அதிக பட்சமாக ஐந்து திருநங்கைகளிடம் தங்களது நல் ஆதரவை பெற்றாலும் கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும். மேலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கை நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இந்த விருது பெற விரும்பும் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள் htttps:// awards.in.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து விரிவான கருத்துகளை சிவகங்கை மாவட்ட சமூக அலுவலகத்தில் நாளை 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.