Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்படி விலையை உயர்த்தலாம்?…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதை  கண்டித்தும், அதனை உடனடியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் நீலமேகம், ரவி, கண்ணன், வசந்தி, அரசு ஊழியர் சங்க நிர்வாகி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |