நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் படம் குறித்து நடிகர் விவேக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது .
எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி @dhanushkraja ப்ரோ?!?! #Karnan பட குழுவுக்கு வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻 pic.twitter.com/Q935zez0Ad
— Vivekh actor (@Actor_Vivek) April 9, 2021
மேலும் கர்ணன் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருவதால் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விவேக் கர்ணன் படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி ப்ரோ. கர்ணன் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.