சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்த பிறகு புதிதாக அமைய உள்ள மூன்று வழிதடங்களிலும் ஓட்டுநர்கள் இல்லாமலேயே மெட்ரோ ரயில் இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. தானாகவே இயங்கும் ரயிலை இயக்கும் விதமாக ரயில் பெட்டிகளை தயார் செய்ய மெட்ரோ ரயில்வே நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.