சென்னையில் உள்ள பல்லாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஞான செல்வம் மற்றும் வகித்தாபுலோரா என்ற தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே ஞான செல்வன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். அதனால் கணவர் மனைவி இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் மனம் உடைந்த மனைவி அறையில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அறையில் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் ஞான செல்வன் கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்பை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கணவன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையானதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.